பதிவு செய்த நாள்
02
மே
2017
01:05
புதுச்சேரி : அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில், ராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திர வைபவம் நேற்று நடந்தது. புதுச்சேரி செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர்
பஜனை மடம் மற்றும் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு திருவாதிரை கமிட்டி சார்பில், ராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திர வைபவத்தையொட்டி, காலை 7:00 மணிக்கு
திருமஞ்சனம், 9:00 மணிக்கு திவ்ய பிரபந்த சேவையும், காலை 10:30 மணிக்கு எம்பெருமானார் வைபவம் என்ற தலைப்பில் திண்டிவனம் ஆஷா நாச்சியார் உபன்யாசம் மற்றும் பகல் 12:30
மணிக்கு ஆராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு ராமானுஜர் எதிர் சேவையுடன்,
நம்பெருமாள் உபயநாச்சியார் வீதி உலா நடந்தது. செயின்ட் தெரேஸ் வீதி, சவுரிராயலு வீதி, கந்தப்ப முதலியார் வீதி, நீடராஜப்பர் வீதி, லூயிபிரகாசம் வீதி, தம்புநாயக்கர் வீதி வழியாக
வீதி உலா நடந்தது.விழா ஏற்பாடுகளை சிறப்பு அதிகாரி அன்பு செல்வன், திருவாதிரை
கமிட்டி தலைவர் தேவநாத ராமானுஜ தாசர் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.