உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2017 04:05
உத்தமபாளையம்:உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகைகோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில்பிரசித்தி பெற்றது. ராகுகேது தோஷ நிவர்ததி ஸ்தலமாகவும்விளங்குகிறது. திருக்கல்யாணம்சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. அன்னை மீனாட்சிபச்சை நிற பட்டு உடுத்தி முழு அலங்காரத்தில் எழுந்தருளினார்.சுந்தரேஸ்வரருக்கும் மீனாட்சிக்கும் திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்எடுத்து கொடுத்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.திருமணத்திற்கு பின் சுந்தரேஸ்வரரும், அம்மனும் முழு அலங்காரத்தில் வீற்றிருந்தனர்.திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு விருந்து நடைபெற்றது.
திருக்கல்யாண ஏற்பாடுகளைகாளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். திருக்கல்யாணம் முடிந்து மாலையில் கல்யாண கோலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா வந்தனர்.