தேனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2017 04:05
தேனி: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தேனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ற்று திருக்கல்யாணம் நடந்தது.
தேனி பங்களா மேட்டில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மனுக்கு மே 5 ல் பட்டாபிஷேகம் நடந்தது. நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. காலை 9:00 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மேல் யானை வாகனத்தில் எழுந்தருளி அம்மன் முக்கிய வீதிகளின் வழியா உலா வந்தார். இன்று காலை தீர்த்தவாரி உற்சவமும் மாலை 4:30 மணிக்கு மேல் பிரதோஷ பூஜையும் நடக்கிறது.