ஊட்டி : ஊட்டி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று மட்டும் அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஊட்டி காந்தலில் உள்ள விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் இன்று மாலை 5.00 மணிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. விழாவில், மூலவரை முழுமையாக அன்னத்தால் மூடி விடுவர். பிறகு ஒவ்வொரு பருக்கையும் சிவபெருமானாக எண்ணி வழிபடுவர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள், மகா தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்யப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சேவா சங்கம் மற்றும் ஆலய முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.