ராசிபுரம்: ராசிபுரம், தர்மசம்வர்த்தனி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோவிலில், சித்திரை திருவிழாவை முன்னட்டு, இந்து அறநிலையத்துறை சார்பில், தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியின் இறுதியாக திருத்தேர் நிலைசேர்தல் நடந்தது. பெரிய கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கைலாசநாதர் தேரை, நேற்று மாலை, 6:00 மணியளவில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தேரடியில் நிலை சேர்த்தனர். அத்துடன், இரண்டு நாட்களாக நடந்த திருவிழா நிறைவுபெற்றது.