திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத மங்கள வார பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து பிரதோஷ நாயகருக்கு அலங்கார மண்டபத்தில் தீபாராதனையும், ஆலய பிரதட்சணம் நடந்தது. நேற்று மாலை மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. சாதம் மற்றும் காய்கனிகள் கொண்டு மூலவர் அலங்கரிக்கப்பட்டு சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து புன்யாகவாசனம், கடஸ்தாபனம், விக்னேஷ்வர பூஜை, கலச பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், அன்னம் மகேஸ்வர பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.