சிங்கம்புணரி, சிங்கம்புணரிசித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாலாபிஷேகத் திருவிழா நடந்தது.இக் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று பாலாபிஷேகத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் பாலாபிஷேகத் திருவிழா நடத்தப்பட்டது. இதையொட்டி நேற்று சிங்கம்புணரி வணிகர்நலச்சங்கம் சார்பில் பால்குட விழா நடந்தது. காலை 9;00 மணிக்குசீரணி அரங்கம் அருகிலிருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது. இந்த பால்குட ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தனர். சித்தருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலை 3;00 மணியளவில் சித்தருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மாலை 5:00 மணியளவில்பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.