Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரம் கோவிலில் நாழிகை மணி புனித நூல்கள் வீட்டில் இருந்தாலே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
போதும் என்ற மனம் வேண்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
04:05

* மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. பணக்காரனோ, ஏழையோ யாராக இருந்தாலும் போதும் என்ற மனதை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.
*முதுமைக்கு தேவையானதை இளமையிலும், மறுபிறவிக்கு தேவையானதை இப்பிறவியிலும் தேட வேண்டும்.
*கண்ணுக்குத் தெரிந்த உயிர்களுக்கு தொண்டு செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.
*கல்வி, தானம், உடல்நலம் மூன்றிலும் தேர்ச்சி பெற இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் அவசியம்.
*நல்லவர்களின் உபதேசத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். சாதுக்களின் நல்ல வார்த்தைகள் காது வழியாக உண்ணும் உணவு போன்றது.
*இறைவன் நமக்குச் செய்யும் அத்தனை செயலும் அருள் தான். சில நேரத்தில் சோதனை குறுக்கிடும் போது, துன்பம் போல தோன்றலாம். ஆனால், அதுவும் கூட அறியாமை தான்.
*பலர் சேர்ந்து முறையிடும் போது அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பது போல, பலர் இணைந்து நடத்தும் கூட்டுப் பிரார்த்தனைக்கும் உடனடியாக பலன் கிடைக்கும்.
*மனிதனுக்கு பெருமை சேர்ப்பது பட்டமோ, பதவியோ, பணமோ, அழகோ, குலமோ அல்ல. அறிவு ஒன்றே ஒருவருடைய உயர்வுக்கு வழிவகுக்கும்.
*இனிய சொற்களைப் பேசும் நல்லவர்களுக்கு உலகில் துன்பம் உண்டாகாது. எம வாதனை இல்லாமல் கடவுளின் திருவடியை அடையும் பாக்கியம் கிடைக்கும்.
*திருமால் வாமனராக அவதரித்து இரண்டு அடியால் மூவுலகையும் அளந்தது போல, வள்ளுவர் திருக்குறளால் எல்லா உலகங்களையும் அளந்தார். அந்த குறள் காட்டும் நல்வழியில் நடப்பது நம் கடமை.
*விளையாட்டிற்கு கூட பொய் சொல்லாதவர்களின் புகழ் மூவுலகிலும் பரவும். வானுலக அரசனான இந்திரனால் கூட அவர்களை வெற்றி கொள்ள முடியாது.
*பொறுமை கடலை விட பெரியது. கடல் சூழ்ந்த இந்த உலகம் அழிந்தாலும், பொறுமை மிக்கவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
*தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஒளிச்சுடர் மேல் நோக்கி நிற்கும். செல்வம் இழந்த நிலையிலும் நல்லவர்கள் உள்ளத்தால் உயர்ந்து நிற்பர்.
*மற்றவரை மேலேற்றும் ஏணி, தான் மேலே செல்வதில்லை. ஆனால் நல்ல கருத்துகளை உலகிற்கு உபதேசிப்பவர்கள் தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்துபவராக இருக்க வேண்டும்.  வேண்டுகிறார் வாரியார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar