பதிவு செய்த நாள்
24
மே
2017
12:05
வேலூர்: சாலை கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வலம் திருவிழா நேற்று நடந்தது. வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள சாலை கெங்கையம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15ல் கணபதி
ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கூழ் வார்த்தல், மலையடிவாரத்தில் உள்ள வயிரவநாதருக்கு பால் பொங்கல் வைத்து வழிபாடு, ஆதிபராசக்தி அம்மன், தனலட்சுமி, சிவலிங்க பூஜை நடந்தது. நேற்று முன் தினம் கெங்கையம்மன் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா மற்றும் கெங்கையம்மன் சிரசு ஏற்றம், விஸ்வரூப தரிசனம் காட்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற, கெங்கையம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சிலம்பாட்டம், கரகாட்டம், இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் கெங்கையம்மன் வீதியுலா, மங்சள்
நீராட்டு விழா நடந்தது.