பதிவு செய்த நாள்
24
மே
2017
12:05
விழுப்புரம் : பூவரசங்குப்பம் லட்சமி நரசிம்மர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மழை வேண்டி நேற்று முன்தினம் சிறப்பு ஜபம் நடந்தது. காலை 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து வருண ஹூக்தம், வருண காயத்ரி மந்த்ர ஜபம், ஸ்ரீ
விஷ்ணு சகஸ்ரஹர ஜபம், ஹோமம் ஆகியன நடந்தது. இதனை தொடர்ந்து, மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, ஆனந்த பைரவி, கேதார ராகம் ஆகிய இசைகள் வாசித்து, பூர்ணாஹூதி,
ஆரத்தி சாற்றுமறை நடந்தது. ஆலய தலைமை குருக்கள் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு, சிறப்பு யாகத்தை நடத்தினர்.
இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் மணி மற்றும் கிராம பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.