வாடிப்பட்டி, வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா நடக்கும். இந்தாண்டு விழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஜூன் 7, 8, 9ல் நடக்கும் இத்திருவிழாவில் முதல் நாள் பால்குடம், பூக்குழி, சுவாமிக்கு பாலாபிஷேகம், இரண்டாம் நாள் பட்டு பல்லக்கு, மூன்றாம் நாள் பூப்பல்லக்கில் சுவாமி வீதிஉலா நடக்கும்.