மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், செல்லுார் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயில், முனீஸ்வரர் கோயில், சித்திரை பெருவிழா உண்டியல், யானை பராமரிப்பு உண்டியல், உபகோயில் உண்டியல்கள் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் திறக்கப்பட்டன. 85 லட்சத்து 78 ஆயிரத்து 868 ரூபாய் கிடைத்தது. இது கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாகும். 580 கிராம் தங்கம், 3 கிலோ 710 கிராம் வெள்ளி, 378 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் போன்றவையும் கிடைத்தன.