நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் வளாகத்தில் நந்தி சிலை, சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. கைலாசநாதர், செண்பகவள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.