பதிவு செய்த நாள்
30
மே
2017
02:05
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே எருதங்குளத்தில் எருதாருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் திருப்பணிக்குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
மே 24 ல், கணபதி ஹோமம், தன பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக பணிகள் நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத் சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்சா பந்தனம்,
ஆறு கால யாக கால பூஜைகள், பூர்ணாகுதி, அஷ்டபந்தன பூஜை, கடம் புறப்பாடுடன், கருட வாகன தரிசசனத்திற்குபின் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மூல ஸ்தானத்தில்உள்ள பைரவர், நவக்கிரகம், தட்சணாமூர்த்தி, ஆஞ்சநேயர், கிருஷ்ணர், விநாயகர் சிலைகளுக்கு, யாகசாலைகள் அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் யாக கால
பூஜைகள் நடந்து, சிதம்பரத்திலிருந்து வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தில் யானை ஊர்வலம், குதிரை நாட்டியம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட சிலம்ப குழுவினரின் சிலம்பாட்டம், 6 நாள்களுக்கு 16 ஆயிரம் பேருக்கு 6
வேளைகள் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ரமணா, பெரியகருப்பன், த.மா.கா., மேற்கு மாவட்ட தலைவர் ரங்கநாதன், முதுகுளத்தூர் மேற்கு
ஒன்றிய தி.மு.க., செயலாளர் பூபதிமணி உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை கவிஞர் சரஸ்வதிநாகப்பன், வள்ளியப்பன், பழனியப்பன் தொகுத்து வழங்கினர். 6 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகுழு தலைவர் சுப்பிரமணியன் கோயில் கோபுரங்கள், மூல ஸ்தான கோயில்கள் உட்பட பல தேவைகளை பக்தர்களின் வசதிக்காக செய்து கொடுத்துள்ளார்.