ராமபிரானின் பரம பக்தர், ராமதாஸர். பக்தியோடு அரசியல், இலக்கியத்திலும் சிறந்து விளங்கியவர். மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இவரது புகழ் வடநாடு முழுவதும் பரவி நிற்கிறது. இவரது மெய்யடியார்கள் தாஸப்ரேமி மண்டல என்ற பெயருடன் நாடு முழுவதும் ராம பக்தியையும், ராம நாம மகிமையையும் தொடர்ந்து பரவச் செய்கின்றனர். மகாராஷ்டிர மொழி பேசும் மக்கள் எங்கெல்லாம் வசிக்கின்றனரோ அங்கெல்லாம் இவரது ஜன்ம தினம், ராமநவமி போலவே, தாஸநவமி என்ற பெயரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.