பதிவு செய்த நாள்
21
ஜூலை
2025
03:07
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். உஜ்ஜைனின் மகாகாலேஷ்வர் கோவில் பஸ்ம ஆரத்தியை பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இந்து நாட்காட்டியில் ஐந்தாவது மாதமான ஷ்ரவணம், ஆண்டின் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. இது இந்து மத நம்பிக்கைகளின்படி, இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர், பாதுகாப்பவர் மற்றும் அழிப்பவர் ஆகிய சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இந்த புனித மாதத்தில், பக்தர்கள் மந்திரங்களை கூறி விரதம் இருந்து, ருத்ராபிஷேகம் செய்வது வழக்கம்.
வாரணாசியின் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில், புனித சவான் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று ருத்ராபிஷேகம் மற்றும் மங்கள ஆரத்தி செய்யப்பட்டது. பாபா விஸ்வநாதரை தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஏராளமான கன்வாரியர்கள் மற்றும் யாத்ரீகர்கள் குவிந்தனர். பக்தர்களின் பெரும் வருகையை நிர்வகிக்க, வாரணாசி காவல்துறை மற்றும் பிளாக் கமாண்டோக்கள் உட்பட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அயோத்தியின் க்ஷீரேஷ்வர்நாத் மகாதேவ் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் டெல்லியின் சாந்தினி சௌக்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கௌரி சங்கர் கோயிலில் பக்தர்கள் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்ய வரிசையில் காத்திருந்தனர்.
* புனித சவான் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை உஜ்ஜைனின் மகாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோவிலில் பஸ்ம ஆரத்தி செய்யப்பட்டது. இதில் பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* சாவன் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை சிவபெருமானுக்கு பிரார்த்தனை செய்ய ஒடிசா, புவனேஸ்வரின் லிங்கராஜ் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.