மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2017 12:06
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை 10:25 மணிக்கு நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி உலா நடந்தது. இன்று காலை 11:00 மணிக்கு மேல ஆவணி மூல வீதி கிருஷ்ணம்மாள் கட்டளை மண்டபத்தில் சுவாமி திருப்பல்லக்கில் எழுந்தருளுவார். இரவு 7:00 மணிக்கு தேரோடும் வீதியில் சிம்ம வாகனத்தில் சுவாமி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 3 கருட சேவை, ஜூன் 8 ல் காலை 7:00 மணிக்கு தேரோட்டம், ஜூன் 10ல் தசாவதாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, செயல் அலுவலர் அனிதா செய்து வருகின்றனர்.