பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
02:06
திருப்பந்தியூர், திருப்பந்தியூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், வரும், 7ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூரில் அமைந்துள்ளது, லட்சுமி நாராயண பெருமாள் கோவில். இந்த கோவிலில், வரும் 7ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. முன்னதாக, அன்று காலை, 5:30 மணிக்கு கருட வாகனத்தில், மலர் அலங்காரத்தில் லட்சுமி நாராயாண பெருமாள் வீதியுலாவும் நடைபெறும். மாலை 6:30 முதல், 8:00 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. அதன் பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலாவும் நடைபெறும்.