அவிநாசி :அவிநாசி, ஆகாசராயர் கோவிலில், கோபுரம் புதுப்பிப்பு உள்ளிட்ட திருப்பணியை துவக்க பூமி பூஜை நேற்று நடந்தது. அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள ஆகாச ராயர் கோவிலில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த, ஆகாசராயர் பக்தர் பேரவை முடிவு செய்துள்ளது. இதற்காக, கோவில் திருப்பணி துவக்க விழா நேற்று சிறப்பு பூஜையுடன் துவங்கியது. பக்தர் பேரவை நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.