பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
02:06
சென்னிமலை: சென்னிமலை யூனியன், திப்பம்பாளையம் மாகாளியம்யன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 8ல் நடக்கிறது. இதையொட்டி, காவிரி ஆற்றில் இருந்து, நேற்று தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர். சென்னிமலை நான்கு ரத வீதிகளில் யானை, குதிரை, பசுமாடுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். கும்பாபிஷேக விழா, இன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. வியாழக்கிழமை காலை, 10:35 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.