பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
02:06
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் மே 29 ல் பிரம்மோத்ஸவ விழா
கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள் காலை, மாலை பல்லக்கு, அன்ன, சிம்ம, சேஷ, கருட, அனுமன், யானை வாகனங்களில் வீதியுலா வந்தார். ஜூன் 4ல் காலை 10:00
மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்து, இரவு பூப்பல்லக்கில் வீதியுலா வந்தனர்.
ஜூன் 5ல் காலை வெண்ணைத்தாழி நவநீத கிருஷ்ணன் சேவையும், நேற்று காலை 6:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் வேடப்பரியாகம் நிகழ்ச்சி நடந்து. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தேரில் வலம் வந்தார். இன்று காலை தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.