கீழக்கரை, திருப்புல்லாணி வடக்குத்தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா நடந்தது. காலையில் நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மூலவருக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது. இரவு 10:00 மணியளவில் பறவைக்காவடி வந்தவுடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
* பஞ்சந்தாங்கி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் விசாக வழிபாட்டை முன்னிட்டு மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு மயில், இளநீர், வேல்காவடிகளை பக்தர்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12:00 மணியளவில் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* ஏர்வாடி முத்தரையர் நகரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா நடந்தது. கடந்த மே 30 அன்று காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. செல்வவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், வேல்காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்தனர். மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் விளக்குபூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா கடந்த மே 28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வந்தன. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மே 29ல் திருவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து கிராமத்தார்கள் மற்றும் உபயதாரர்களின் நிகழ்ச்சிகளும் நடந்தது.