Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோலைமலை முருகன் வைகாசி விசாக விழா திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாகம்: மருதமலையில் குழுமிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2017
01:06

கோவை:  வைகாசி விசாகத்தை ஒட்டி, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனத்துக்காக, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர். முருகனின் ஏழாவது படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலை 5:00 மணிக்கு, கருவறையிலுள்ள சுவாமிக்கு முன், அலங்கரிக்கப்பட்ட கோமாதா எழுந்தருளுவித்து, மங்கள வாத்தியங்களை முழங்க கோமாதா பூஜை நடந்தது. சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட, சகலவித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு தங்கக்கவசம், வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டது. சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் பரிமாறப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில், சுவாமி எழுந்தருளி காட்சியருளினார். பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்தனர். வைகாசி விசாகத்தை ஒட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் சுவாமிதரிசனம் மேற்கொண்டனர். சிறப்பு தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, பத்தாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கோவையில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று வைகாசி விசாகம் சிறப்பாக நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar