கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சந்திர சேகரேந்திரர் கோயிலில் உள்ள ரகசிய அறை இன்று திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள புது கும்மிடிப்பூண்டியில் சந்திர சேகரேந்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் ரகசிய அறையில் புதையல்கள் இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த ரகசிய அறை திறக்கப்பட்டது. ஆனால் அதில் பொக்கிஷமோ, புதையலோ ஏதும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.