Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனை வணங்க நான்கு முறைகள்! இரண்டும் ஒன்று தான்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் நடத்தலாமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2017
05:06

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம் என்று பொதுவான ஒரு கருத்தை சொல்வார்கள். ஆனால், இப்படி பொய் சொல்லி திருமணம் செய்வது தவறு என்கிறது சாஸ்திரம்.  அப்படியானால், இந்த சுலவடை எதற்காக உருவானது?ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்பதை ஒருவருக்கொருவர் ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. நிச்சயிக்கப்பட்ட திருமணம், கடைசி நேரத்தில் நின்று போகும் பட்சத்தில் அதை நடத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று சாஸ்திரம் அனுமதி தந்திருக்கிறது.ஒரு இல்லத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுமணமேடையும் அமைத்தாயிற்று. அப்போது,வரதட்சணை குறைபாடுபோன்ற ஏதோ ஒருபிரச்னை எழுகிறது.இரு வீட்டாரும்தகராறு செய்துகொள்கின்றனர்.திருமணம் நின்றுவிடுமோ என்ற சூழ்நிலை... இந்த சூழ்நிலையில் அந்த திருமணத்தை ஏதாவது ஒரு பொய்சொல்லி நடத்த சாஸ்திரம் சம்மதிக்கிறது.

அவ்வாறு பொய் சொன்னால் அது பொய் ஆகாது. அதற்குரிய தண்டனையும் கிடைக்காது. இதுபோல, ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்யும்போது, சில நன்மைகள் கருதியும் பொய் சொல்லலாம். அட...நம்ம சீதாதேவியே கூட, ஒருமுறை பொய்சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயிட்டாங்க. எப்போது தெரியுமா?ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தார். அப்போது அங்கிருந்த ராட்சஷிகள் சீதையிடம், அந்த குரங்கு எங்கிருந்து வந்ததென உனக்கு தெரியுமா? உன்னிடம் அது பேசிக் கொண்டிருந்ததாக சொல்கிறார்களே! என கேட்டதற்கு, அது யாரென்றே எனக்கு தெரியாது. ஒரு வேளை இந்த வனத்தை அழித்ததால், உங்கள் அசுர கூட்டத்தை சேர்ந்ததாக இருக்குமோ என நான் எண்ணியிருந்தேன், என சொல்லி ஆஞ்சநேயரை காப்பாற்றி விட்டாள். ஆஞ்சநேயர் ராமதுõதன் என தெரிந்திருந்தும், அவரைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் கருதி பொய் சொல்லி விட்டாள். இதைத்தான், பொய்மையும் வாய்மையிடத்தே புறைதீர்ந்த நன்மை பயக்குமெனின்என்று திருக்குறள் கூறுகிறது.திருமணம் நடக்கும் முன்பு பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது பிற்காலத்தில் பிரச்னைகளைத் தான் உருவாக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar