Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாதங்கி முத்திரை நாத வழிபாடு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முருகப் பெருமானின் முற்பிறவி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2017
03:06

ஐப்பசி மாதம் அமாவாசையைத் தொடர்ந்து  வரும், சஷ்டி திதியை கந்த சஷ்டி என்று போற்றுவர். இந்நாளில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள கோயில்களில் எல்லாம் திருவிழாக் கோலம் காணும். இதற்கு மூல காரணமாக விளங்குபவர், சரவண பவ என்று போற்றப்படும் முருகப் பெருமான் என்பதை யாவரும் அறிவோம்.

முருகப்பெருமானுக்கு பல பெயர்கள் உள்ளன. அவை அனைத்தும் காரணப் பெயர்கள். கந்தன், குமரன், வேலன், சரவணபவன், ஆறுமுகன், குகன், விசாகன், குருநாதன் என்று பல பெயர்கள் இருந்தாலும், இதில் சரவண பவன் என்ற திருப்பெயர் முருகப் பெருமானின் முற்பிறவியைக் குறிக்கும் என்று புராணம் கூறுகிறது. சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தைக் கொண்ட முருகப் பெருமான், நாணல் சூழ்ந்த பொய்கையில் அவதரித்ததால் இத்திருப்பெயர் பெற்றார். இதில் ச என்றால் மங்கலம், ர என்றால் ஒளி, வ என்றால் சாத்வீகம், ண என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்று பொருள் சொல்லப்படுகிறது.

பல சிறப்புப் பெயர்கள் பெற்ற முருகப்பெருமான், சரவணப்பொய்கையில் அவதரிக்கக் காரணம் என்ன?

முருகப் பெருமான், முற்பிறவியில் பிரம்மாவின் மானசீகப் புதல்வராக, சனத்குமாரர் என்ற பெயருடன் பிரம்ம ஞானியாகத் திகழ்ந்தார். ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கு முன் அவர் கனவில் அந்த நிகழ்ச்சி படமாகத் தெரியும் ஆற்றல் பெற்றார். ஒருநாள், பிரம்ம ஞானியான சனத் குமாரர், தான் ஒரு சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டார். இந்தக் கனவினை தன் தந்தை பிரம்மாவிடம் சொல்லி விளக்கம் கேட்டார் சனத்குமாரர். தந்தையாகிய பிரம்மா, சனத்குமாரா, இந்தப் பிறவியில் - நீ பிரம்ம ஞானியாக இருப்பதால் அது இயலாது. அடுத்த பிறவியில் ஒரு கால் நீ அசுரவதம் செய்யும் வாய்ப்பு கிட்டும் என்றார்.

இந்த பிரம்மஞானியைக் காண ஒரு நாள் பார்வதியும், பரமேஸ்வரனும் வந்தார்கள். பிரம்ம ஞானியின் அறிவாற்றல், அவரது பணிவு அவர்களை மிகவும் கவர்ந்தது. அப்போது, பரமேஸ்வரன் சனத் குமாரரைப் பார்த்து, உனக்கு வரம் தர எண்ணுகிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றார்.

சனத்குமாரரோ, எனக்கு வரம் எதுவும் தேவையில்லை. உங்களுக்கு ஏதாவது தேவையெனில் கேளுங்கள் என்றார், பணிவுடன்.

சிவபெருமான் கோபம் கொள்ளாது, நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றார்.

சரி, உங்கள் விருப்பப்படியே மகனாக அவதரிப்பேன் என்று வாக்குக் கொடுத்தார்.

சனத்குமாரர் சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பார்வதி, சிவத்திடமிருந்து மட்டுமே நீ அவதரிக்க வேண்டும்... என்றால், என் பங்கு என்ன? என்றாள்.

அதற்கு சனத்குமாரர், அன்னையே கர்ப்பவாசம் செய்து பிறக்காது ஈசனின் சக்தியை உலகுக்குணர்த்தும் விதமாக பஞ்சபூதங்கள் வழியாக அவரது ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றவே விரும்புகிறேன். ஈசனின் சக்தியால் மட்டும் அவதரிக்க அருளாசி வழங்குங்கள் என்று வேண்டினார். அன்னையும் அருளினாள்.

காலம் கடந்தது...: பஸ்மாசுரன் என்ற அரக்கனை வதம் செய்ய சிவபெருமான் விஷ்ணுவுடன் சென்றிருந்த காலக்கட்டத்தில், பார்வதி தன் பதியின் பிரிவு தங்காமல் உருகி பூலோகத்தில் ஒரு பொய்கையாக மாறியிருந்தாள். அதுதான் சரவணப் பொய்கை என்கிறது புராணம்.

மீண்டும், ஈஸ்வரனுடன் ஐக்கியமான பின்பும் அந்தப் பொய்கை நிலைக்கும்படி செய்திருந்தாள் பார்வதி. அது இப்போது அம்பாளின் நினைவுக்கு வந்தது.

சனத்குமாரர், அடுத்த பிறவியில் ஈஸ்வரரின் நெற்றிக் கண்ணின் ஒளிப்பிழம்பிலிருந்து ஆறு பொறிகளாகப் பிறப்பதென்றும், பிறகு அதை பார்வதி தேவி சரவணம் என்கிற தன் சரீரத்தில் தாங்கி சுப்பிரமணிய சொரூபமாக உருவாக்கித் தருவதென்றும் ஈஸ்வரனும் தேவியும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படி ஈஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து கிளம்பிய ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் சங்கமமாயின. உடனே அந்தப் பொய்கையில் தோன்றிய ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகள் அவதரித்திருந்தன. அந்தக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் எடுத்து வளர்த்தார்கள். அவர்கள் அந்தக் குழந்தைகளின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல், கங்கையிடம் சமர்ப்பித்தனர்.

கங்கை முயற்சித்தாள், அவளாலும் முடியவில்லை. பிரம்மனிடம் ஆலோசனை கேட்டாள் கங்கை. பிரம்மா, கங்கையிடம் இதை நீ சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்து விடு. அது, எவ்வளவு கடுமையான உக்கிரமாக இருந்தாலும், தாய் தாங்கிக் கொள்வாள் என்றார்.

சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளை சில நாட்கள் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர்கள் வளர்த்ததால், கார்த்திகேயன் என்றும், பிறகு கங்கையிடம் அந்தக் குழந்தைகள் வளர்ந்ததால் காங்கேயன் என்றும் காரணப் பெயர்கள் வந்தன. இறுதியாக சரவணப் பொய்கையில் இடப்பட்ட அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பார்வதி தூக்கி அணைத்து ஓர் உடல், ஆறு முகங்களாகத் திகழும்படிச் செய்து, ஞானப்பால் ஊட்டி கைலாயத்திற்கு அழைத்துச் சென்றாள் என்று புராணம் கூறுகிறது. சரவணப் பொய்கையில் அவதரித்த முருகப் பெருமான் சூரபத்மனை ஐப்பசி சஷ்டி திதியில் ஆட்கொண்டார் என்பது புராண வரலாறு.

இந்த சூரபத்மன் என்பவன், அவனது முற்பிறவியில் தட்சனாகப் பிறந்தவன். சிவபெருமானிடம் வரங்கள் பெற்றவன். அவனது மகள்தான் தாட்சாயிணி. அவளைத்தான் சிவபெருமான், மணம் புரிந்தார். அந்த தாட்சாயிணிதான் அன்னை பார்வதி. அந்த வகையில் சூரபத்மன், முருகப் பெருமானுக்கு தாத்தா ஆகிறார். சூரபத்மன், இறைவனிடம் பெற்ற வரத்தால் ஐப்பசி சஷ்டி திதியில், முருகப்பெருமானுடன்! நடந்த போரில், மாமரமாகி காட்சி தந்து நின்றான். பிறகு, முருகப்பெருமான், தன் அன்னையிடமிருந்து பெற்ற சக்தி வேலினால் இரண்டாக சூரனைப் பிளந்தார். ஒரு பகுதி சேவலாகவும், மற்றொரு பகுதி மயிலாகவும்  மாறியது. சேவல், முருகனின் கொடியில் சின்னமாக அமர்ந்தது. மயில் முருகனுக்கு வாகனமானது.

சூரபத்மன், முருகப்பெருமானுக்கு தாத்தா ஆகிறார். பேரனைச் சுமக்க தாத்தாவிற்கு கஷ்டமா என்ன? என்ன சுகம்? என்ன மகிழ்ச்சி?

முருகபக்தர்கள் ஐப்பசி அமாவாசையைத் தொடர்ந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். திரவப் பொருளே அவர்களுக்கு ஆகாரம். முருகப் பெருமான் புகழ்பாடும் பாடல்கள் கோயில்களில் எதிரொலிக்கும். இந்த சஷ்டி திதிக்கு அடுத்த நாள் தெய்வானை - முருகன் திருமண வைபவம் நடைபெறும். இந்திரன், தன் மகளாகிய தெய்வானையே முருகனுக்கு, மணம் செய்து கொடுத்த திருத்தலம் திருப்பரங்குன்றம். திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் கடைசி நாள், முருகன் - தெய்வானை திருமண நிகழ்ச்சி நடைபெற்றதும், முருகன் தெய்வானையுடன் வீதி உலா வருவார். அப்போது மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். போரில் வெற்றி பெற்றதன் உக்கிரகத்தைத் தணிக்கும் வகையிலும் திருமண வைபவ மகிழ்ச்சியிலும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar