பதிவு செய்த நாள்
17
நவ
2011
11:11
பழநி:பழநியில் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் வருகையால், "சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது. பழநிக்கு வரும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆறுமாத (கார்த்திகை முதல் பங்குனி வரை) "சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது. சாதாரண வீட்டு உபயோக, விளையாட்டு, பிரசாத பொருட்கள் மட்டுமின்றி, பிரத்யேக சுவாமி சிலைகள், விசேஷ மாலைகளை வாங்கிச் செல்வதில் வெளிமாநில பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வியாபாரி மனோகர் கூறுகையில், "பெரியளவு துளசி, கருந்துளசி, கண் திருஷ்டி போக்கும் நவகண்டி, பவள மாலைகளை விரும்பி வாங்குகின்றனர். வெள்ளி, தங்க முலாம் மற்றும் கைப்பிடிகள் பொருத்திய வலம்புரிச் சங்குகள், தட்சிணா மூர்த்தி சுவாமிக்கான விலை உயர்ந்த கனக புஷ்பராகம், அமெரிக்க வைரம் கொண்ட மாலைகள்,பெரியளவு மீன்முள் மூலம் தயாரிக்கப்பட்ட, (காளிக்கு அணிவிக்கக்கூடிய) விசேஷ மாலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். லேமினேடட், பிரேம் செய்த படங்கள் தவிர, வண்ணங்கள் மாறாத நவீன (மேட்விச்) படங்கள், 24 கேரட் தங்க முலாம் பூசிய படங்கள், சீன வாஸ்து, குழந்தைகளுடன் விளையாடும் நவீன குபேரன், நீர்வீழ்ச்சி போன்றவை அதிகளவில் விற்பனையாகிறது என்றார்.