சுசீந்திரம் கோயிலில் திருகார்த்திகை திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2011 11:11
சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமவாரம், மாணிக்க ஸ்ரீபலி மற்றும் திருகார்த்திகை திருவிழா இன்று துவங்குகிறது.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சிவனுக்கு விசேஷ நாளான கார்த்திகை சோமவார தினங்கள் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளிலும், அடுத்த மாதம் 5 மற்றும் 12ம் தேதிகளிலும் நடக்கிறது. இந்நாட்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்நாட்களில் அதிகாலை 3.30 மணி முதல் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.மேலும் கார்த்திகை மாத 30 நாட்களும் இரவு ஏழு மணிக்கு கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி நடக்கிறது. ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், கருட வாகனத்தில் விஷ்ணுவும் கோயிலின் நான்கு பிரகாரம் வழியாக மூன்று முறை பக்தர்கள் புடை சூழ வலம் வருகின்றனர். இதன் தொடக்க விழா இன்று மாலை கொன்றையடி சன்னிதி முன் நடக்கிறது.அடுத்த மாதம் எட்டாம் தேதி திருக்கார்த்திகை திருவிழா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி வாகனங்கள் ரத வீதிகளில் பவனி வருகின்றன. இரவு 7.30 மணிக்கு வடக்கு ரதவீதியில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்து வருகின்றனர்.