பதிவு செய்த நாள்
17
நவ
2011
11:11
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் சனிப்பெயர்ச்சி ஹோமம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நவக்கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவருமான சனீஸ்வர பகவான் ஒரு ராசியிலிருந்து இரண்டரை ஆண்டுகளில் பிரவேசிக்கிறார். தற்போது கன்னி ராசியில் இருக்கும் சனீஸ்வர பகவான் திருக்கணிதப்படி நவம்பர் 15ம் தேதி துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். துலாம் ராசி சனீஸ்வர பகவானுக்கு உச்சவீடாகும்.இதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சன்னதியில் சனிப்பெயர்ச்சி ஹோமம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உலக நன்மைக்காக ராஜப்ருஷ்ட ஹோமம் நடந்தது. ஹோமத்தை வேத விற்பன்னர்கள் பஞ்சமுக ஆஞ்சநேயர் உபாசகர் ரெங்கநாதன், கீதாச்சாரியன் என்ற பார்த்தசாரதி நடத்தினர்.ரிஷபவம், சிம்மன், தனுசு ஆகிய ராசிகளுக்கு நற்பலன்களையும், மிதுனம், கடகம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு மிதமான பலன்களையும், மே ஷம், துலாம், விருச்சகம், மீனம் ராசிகளுக்கு நன்மை தீமை கலந்து வழங்குவார்.