பதிவு செய்த நாள்
17
நவ
2011
12:11
ராசிபுரம்: ராசிபுரம், வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவில், கும்பாபிஷேக விழா நடந்தது.வெற்றி விகாஷ் பெண்கள் பள்ளி வளாகத்தில், வித்யா விநாயகர் கோவில், ஆண்கள் பள்ளி வளாகத்தில் வெற்றி விநாயகர் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.தொடர்ந்து, முதல் கால யாக சாலை பூஜை, 108 மூலிகை ஹோமம், இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, நான்காம் கால யாக சாலை பூஜையும் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. சேலம் டி.ஆர்.கண்ணன் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேக விழா நடந்தது.நிகழ்ச்சியில், வெற்றி விகாஷ் கல்வி நிறுவனர் குணசேகரன், தலைவர் கணேசன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், சிற்றரசு, வெற்றிச்செல்வன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.