தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில் காலபைரவர் பிறந்த நாள் மற்றும் அஸ்டமி விழா நாளை (18ம் தேதி) நடக்கிறது.இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், நாளை பைரவர் அஸ்டமியையொட்டி, ஸ்வாமிக்கு அஸ்டமி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்தரயாகம் நடக்கிறது. தொடர்ந்து, பைரவருக்கு, 64 வகையான அபிஷேகம், சிறப்பு ராஜஅலங்கார நிகழ்ச்சி மற்றும் 28 ஆகம பூஜை, உபசார பூஜை, மங்கள ஆர்த்தி நடக்கிறது. இரவு ஸ்வாமிக்கு குறிஞ்சி யாகம் நடத்தப்படவுள்ளது.