Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தகப்பனார் இருக்கும்போது பவித்ர ... தோமாலை சேவை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மன அமைதி வேண்டுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2017
04:06

ஜபத்தின்போது மனம் அமைதியின்றித் தவிக்கிறது என்று முறையிடுகிறீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல; பலருக்கும் இதே பிரச்னைதான். இருந்தாலும் ஜபம் செய்வதை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது. மேலும், இறைவனின் திருநாமம் எல்லாத் தளைகளையும் தகர்த்தெறிந்து விடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். சரியாகவோ, தவறாகவோ, இறைநாமத்தை எப்படி உச்சாரித்தாலும் அதற்கென்று சக்தி உண்டு. உதாரணத்திற்கு ஓர் இனிப்புப் பண்டத்தை எந்தப் பக்கத்திலிருந்து கடித்தாலும் அது இனிப்பைத்தான் தரும். நாம் காணும் யாவுமே ஒரு நாள் நிச்சயம் அழிந்துவிடும். கடவுள் திருநாமம் மட்டுமே எப்போதும் நிலைத்திருக்கும். யார் இறைவனை நினைக்கிறார்களோ, அவரது நாமத்தை ஜபிக்கிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் எல்லாம் கிடைக்கும். அவரது நாமமே என்றும் சத்தியமானது.

இறைவன் தமது பிள்ளைகளின் உடலாகிய கோயிலின் இதயத்திற்குள் நுழையும்முன் அவர்களிடத்தில் பக்தி, நம்பிக்கை, பிரேமை போன்றவற்றை நிரப்புகிறார். ஒரு மன்னன் ஓரிடத்திற்கு வருகை தரும் முன் அவன் உபயோகிக்கும் பொருள்களை அனுப்பி வைப்பது போன்றது இது. இதைக் கேட்டுக் கொள். உனது குரு எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் சரி, ஜப, தியானத்தை நீ பழகாவிட்டால் உனக்கு எதுவும் கிடைக்காது. முதலில் உன் மனதை விவேகத்தால் வழிக்குக் கொண்டு வா. பிறகு முறையான பயிற்சியினால் அதை அமைதிப்படுத்து. இதன் மூலம் அது ஒரு நாளின் 24 மணி நேரமும் இறைவனை நோக்கியே திரும்பியிருக்கும். எப்போதும் அவரிடத்திலேயே நிலைபெற்றிருக்கும். அப்போது நீ அனைத்தையும் புரிந்து கொள்வாய். சிறுவயதிலிருந்தே மனம் அலைபாய்கிறது. ஆனால் ஒன்று. அது எப்படி அலைந்தாலும், நீ இறைவனை நோக்கி முன்னேறியாக வேண்டும். அவர் மட்டுமே எப்போதும் நம்முடன் இருப்பவர். உண்மையில் அறிய வேண்டியது இதுவே.

இறைவனிடத்தில் பேசு. மனம் நிலையற்ற உலகியலிலிருந்து தானாகவே விடுபட்டுவிடும். உன் முழு மனதையும் யாருக்காவது தர வேண்டுமென்றால் அது இறைவனுக்காக மட்டுமே இருக்கட்டும். மனிதனின் பந்தபாசங்கள் வலிமை மிக்கவை. மனம் மதம் கொண்ட குதிரை போல் இங்குமங்கும் தறிகெட்டு ஓடும். குதிரையோட்டி கடிவாளத்தைக் கொண்டு அதனைக் கட்டுப்படுத்துவது போன்று ஒரு மனிதன் விவேக சக்தியின் மூலம் அதனை வழிக்குக் கொண்டு வர வேண்டும். விவேகமானது ஏற்கனவே மனிதனிடத்தில் உள்ளது. விவேகத்தைக் கடைப்பிடிக்கும் மனிதன் ஒருபோதும் துன்பத்திற்கு ஆளாவதில்லை என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். உனக்கு மன அமைதி வேண்டும் என்று கேட்கிறாய். சுவாமி விவேகானந்தர் ஒரு பாடலைப் பாடுவார்: ஓ அன்பா, என்னை எங்கே நீ தேடுகிறாய்? நான் காசியிலோ, கயிலாயத்திலோ மெக்காவிலோ, மசூதியிலோ, வேறு எங்கேயோ இல்லை. ஆனால் நான் உன்னிடத்திலேயே இருக்கிறேன்.

கணப்பொழுதேனும் நம்பிக்கை உன்னிடத்தில் இருந்தால் நீ சிறு முயற்சியிலேயே என்னைத் தேடிக் கண்டு கொள்ளலாம். எங்கே நம்பிக்கை இருக்கிறதோ அங்கே நான் இருக்கிறேன். இது போன்ற வாசகங்கள் உனக்கு வறட்டுத்தனமாகவும் அறிவுக்கு ஒவ்வாதவையாகவும் தோன்றலாம். ஆனால் இதை உறுதியாக அறிந்து கொள். அந்த அகிலாண்டேஸ்வரி அன்னையே அசையும் அசையாப் பொருள்களிலும் அதன் இன்ப துன்பங்கள் யாவற்றிலும் உள்ளே உறைகின்றாள். அமைதியைப் பெறுவதற்கு மற்றொரு வழி உள்ளது. உன் ஓய்வு வேளையில் நல்ல புத்தகங்களைப் படி; மற்றவரோடு சேர்ந்து அதைப் பற்றி கலந்துரையோடு. இறைவனைப் பற்றிப் பேசு. உன் மனம் உலகியல் விஷயங்களிலிருந்து தாமாகவே விடுபடுவதை நீ காண்பாய். தீய எண்ணங்களாலும் தீய பேச்சுக்களிலும் இரவு பகலாக மூழ்கி இருக்கும். மனிதனின் உள்ளத்திற்கு அமைதி எப்படிக் கிடைக்கும்? இதனால்தானே பலர் அமைதியின்றித் தவிர்க்கின்றனர்!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar