Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மன அமைதி வேண்டுமா? வைரமும் நெல்மணிகளும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தோமாலை சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2017
04:06

புஷ்ப அலங்கார பிரியனான திருவேங்கடமுடையானின் திவ்விய மங்கள மூர்த்திக்கு அநேக பஷ்ப மாலைகளுடன், துளசி மாலைகளோடு செய்யும் அலங்காரம் தோமாலை சேவை! முந்தய நாள் இரவே அந்தந்த காலத்தில் கிடைத்திடும் பல்வேறு வகையான பரிமள புஷ்பங்களுடன் தயார்செய்யப்பட்ட மாலைகள் யோக நரசிம்ம ஸ்வாமி கோயில் அருகே உள்ள புஷ்ப அறையில் தயார்படுத்துவர். தோமாலை சேவை செய்வதற்கு முன்னர் போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். அனுஷ்டான உபசாரங்கள் செய்தபின்னர், அபிஷேகத்திற்கு ஆகாச கங்கை தீர்த்தத்தினைக் கொண்டு அபிஷேகம் பண்ணுவர். பின்னர் ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமியின் நிஜபாதங்கள் மீது உள்ள தங்க கவசத்திற்கு அபிஷேகம் பண்ணுவர். வேதபண்டிதர்கள் புருஷசூக்தம் சேவித்துக் கொண்டிருக்க அர்ச்சக ஸ்வாமிகள் எம்பெருமான் திருச்சன்னிதியில் உள்ள நரசிம்ம, ஸ்ரீராமர் சாளக்கிராமங்களுக்கு அபிஷேகம் பண்ணுவர். பின்னர், மூலமூர்த்திக்கு வக்ஷஸ்தல லக்ஷ்மிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி மூர்த்திக்கு இங்ஙனே சன்னிதியில் உள்ள பஞ்சபேரங்களுக்கு அபிஷேகம் செய்தபடி ஆகாச கங்கை தீர்த்தத்தின் சம்ப்ரோக்ஷணப் பண்ணுவர். ரோஹிணி நக்ஷத்திரம் அன்று ருக்மணி ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமிக்கும், புனர்பூச நக்ஷத்திரம் அன்று ஸ்ரீசீதா ராம லக்ஷ்மணர்களுக்கும், திருவோண நக்ஷத்திரம் அன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமிக்கும் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகத்திற்கு பின் போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கு ஆடை அலங்காரம் திருமண் காப்பு இட்டு, மலர் மாலைகளை அலங்கரித்து, ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமிக்கும் புஷ்ப அலங்காரம் செய்வர். சன்னதியில் உள்ள எல்லா விக்ரஹங்களுக்கும் புஷ்ப அலங்காரம் பண்ணுவர். புஷ்ப அலங்காரம் முழுமை பெற்ற பிறகு வேத பண்டிதர்கள் மந்திர புஷ்பங்களை சமர்பிப்பர். அதன் பின்னர் தூப, தீப, நக்ஷத்திர ஆரத்திகள் காட்டுவர். இறுதியாக கற்பூர ஹாரத்தி விமர்சையாக நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar