சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில் பழமையானது. இக்கோயிலின் ஆனித்திருவிழா நேற்று தொடங்கியது.காலை 10:00 மணியளவில் கிராமத்தார்கள் முன்னிலையில் கோயில் கொடிமரத்தில் ஐதீக முறைப்படி கொடி ஏற்றப்பட்டது.இரவு 9:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர், பிரியாவிடை, பரிவார தெய்வங்களுக்கு காப்பக் கட்டப்பட்டது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும்இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று சுவாமி கேடய வாகனத்தில் உலாவந்தார்.5 ம் நாளான ஜூலை 2 ம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும், 8 ம் நாளான ஜூலை 5 ம் தேதி மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.அன்றைய தினம் பூப்பல்லக்கு உற்சவமும் நடைபெறும், 9 ம் நாளான ஜூலை 6 ம் தேதி தேரோட்டம் நடைபெறும், 10 ம் திருநாளன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார் செய்து வருகின்றனர்.