இருக்கன்குடியில் கட்டணம் உயர்ந்தது: அதிர்ச்சியில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2017 01:06
சாத்துார், சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் காதுகுத்து,முடிக்காணிக்கை கட்டணச்சீட்டு உயர்வால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இக் கோயிலில் காதுகுத்து கட்டணமாக 10 ரூபாய் 50 காசு , முடிகாணிக்கை செலுத்த 10 ரூபாய் 50 காசு கட்டணமாக வாசூலிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக காதுகுத்து கட்டணம் ரூ. 50 ரூபாயாகவும், முடிகாணிக்கை செலுத்த ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் வந்து செல்லும் இக்கோயிலில் திடீர் என கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள போதும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர்,குளியல் அறை, கழிப்பறை வசதிகள்மேம்பாடு அடையவில்லை, என்கின்றனர் பக்தர்கள். சாத்துார் மாரியப்பன்: கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து நாளிதழ் , அலுவலக நோட்டீஸ் போர்டிலும் விளம்பர படுத்தி பக்தர்களின் கருத்தை கேட்க வேண்டும். ஆனால் நிர்வாகம் எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் திடீர் என உயர்த்தியிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முடிகாணிக்கை கட்டணத்தை உயர்த்திய போதும் காணிக்கை செலுத்துபவர்களிடம் தொழிலாளர்கள் கூடுதலாக பணம் கேட்பதும் தொடர்கிறது.இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உயர்த்திய கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்,. என்றார்.