Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவகோட்டை கண்டதேவி ... திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு அபிஷேகம் திருத்தணி ஷீரடி சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நீதி நாயனார் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
அமர்நீதி நாயனார் குரு பூஜை விழா

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2017
12:06

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், அமர்நீதி நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. சோழநாட்டில், பழையாறை பகுதியில், ஏழாம் நுõற்றாண்டில் பிறந்தவர் அமர்நீதி நாயனார். வணிகரான அவர், பெரும் செல்வந்தராகவும் இருந்தார். எனினும், சிவத்தொண்டு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சிவனடியார்களுக்கு திருவமுது கொடுப்பதற்காக, திருநல்லுõரில் மடம் கட்டினார். அமர்நீதி நாயனாருக்கு, சிவபெருமாள் அருள் புரிய எண்ணி, பிரமச்சாரியாக மடத்துக்கு வந்தார். அணிந்திருந்த கோவணத்தை கொடுத்து, பத்திரமாக வைக்குமாறு கூறி, காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, கோவணம் இறைவனால் மாயமாக்கப்பட்டது.

சினங்கொண்ட பிரம்மச்சாரி, தனது கோவணத்துக்கு இணை இல்லை; எனவே, அதை தராசில்  வைத்து, அதே எடைக்கு பொருள் வழங்க வேண்டும் என்றார். தராசின் ஒரு புறம், பிரம்மச்சாரி வேடத்தில் இருந்த இறைவனின் துணியும்; மற்றொரு புறம், மடத்தில் இருந்த <உடை, உணவு,  பொன், பொருள், அமர்நீதி நாயனார் மனைவி, மக்கள் என அனைத்தும் வைத்தும், சமநிலைக்கு வர வில்லை. இதனால்,  தவறு இழைக்கவில்லை என்றால், தராசு சம நிலையை அடையட்டும் என்றவாறே, அமர்நீதி நாயனார் ஏறி நின்றார். தராசு சமநிலையை  அடைந்ததோடு, சிவபெருமான் அம்மையப்பராக காட்சியளித்து, சிவலோக வாழ்வு அளித்தார். அவரது பிறந்த நாளான, ஆனி மாத மகம் நட்சத்திரத்தில், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் எழுந்தருளியுள்ள, அமர்நீதிநாயனாருக்கு, அர்த்தசாம பூஜை சிவன டியார் திருக்கூட்டம் சார்பில், நேற்று குரு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானோர் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar