Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
என்றும் வாழும் தியாகிகள் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ என்ன ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒரே நாளில் ஆயிரம் பிறை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2017
04:07

ஒரு வயதான தம்பதி, காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க வந்தார்கள். அவர்கள் மனதில் ஒரு சந்தேகம். அதை சுவாமியிடம் தெரிவித்தார்கள். சுவாமி! எங்களுக்கு எண்பது வயது பூர்த்தியாகி விட்டது.  சதாபிஷேகம் செய்துகொள்ளுங்கள் என எங்கள் பிள்ளைகள் மூன்று பேரும் எங்களை ஓயாமல் வற்புறுத்துகிறார்கள். ஆனால் எங்களுக்குத் தான் மனம் ஒப்பவில்லை. சுவாமிகள் பரிவோடு கேட்டார்:ஏன் ஒப்பவில்லை? சதாபிஷேக அழைப்பிதழில் ஆயிரம் பிறை கண்டவர் என்று போடுவார்கள் இல்லையா? நாங்கள் அப்படி ஆயிரம் பிறை காணவில்லையே? சிலர் தவறாமல் மூன்றாம் பிறையைப் பார்க்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால்  போட்டுக் கொள்ளலாமோ என்னவோ! ஆனால் ஆயிரம் பிறையைப் பார்க்காத நாங்கள் ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று போட்டுக் கொள்வது சரியாக இராதே! அப்படிச் செய்வது தப்பில்லையா?  அவர்களுடைய வெகுளித்தனமான.. ஆனால் விவாதபூர்வமான பேச்சைக் கேட்டு சிரித்தார் பெரியவர்.

அவர்கள் சொல்கிறபடி பார்த்தால் உலகில் யாருமே சதாபிஷேகம் செய்து கொள்ள முடியாதே! சற்று யோசித்த அவர் சொன்னார்: நல்லது. அதைப் பற்றிப் பிறகு பேசுவோம். முதலில் அருகேயுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கே சகஸ்ரலிங்கம் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம் பொறிக்கப்பட்ட விக்ரகம்) உண்டு.  அதை  நமஸ்காரம் செய்துவிட்டு மாலையில் இங்கே வாருங்கள்! உடனடியாக அவர்கள் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் போய் சகஸ்ரலிங்கத்தை பக்தியோடு தரிசித்துவிட்டு, பெரியவரைத் தரிசிக்க மறுபடி வந்தார்கள். சுவாமி புன்முறுவலோடு கேட்டார்: என்ன.. சகஸ்ர லிங்க தரிசனம் ஆயிற்றா? ஆயிற்று சுவாமி! அப்படியானால் இனிமேல் நீங்கள் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். அது எப்படி? ஒவ்வொரு லிங்கத்தின் சிரசிலும் சந்திரப் பிறை இருப்பதாக ஐதீகம். நீங்கள் சகஸ்ரலிங்கத்தைத் தரிசனம் செய்தபோது அந்தப் பிறைகளையும் சேர்த்து தரிசனம் செய்தீர்கள். எனவே நீங்கள் ஆயிரம் பிறையை தரிசித்து விட்டீர்கள். இனிமேல் சதாபிஷேகம் செய்துகொள்ளத் தடையேதும் இல்லை. சரிதானே! சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்தார் பரமாச்சாரியார். அந்த தம்பதி சதாபிஷேகம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு மனநிறைவுடன் விடைபெற்றனர். -  திருப்பூர் கிருஷ்ணன்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar