சிவனின் அழகில் மயங்கிய ஆடி என்னும் அசுரன், அம்பிகையின் வடிவில் கைலாயம் வந்தான். அவனை சிவன் தண்டிக்க முயன்றார். ஆனால் இரக்கம் கொண்ட அம்பிகை தண்டிக்க விரும்பாமல் தனக்குரிய மாதத்திற்கு ஆடி என்னும் பெயர் விளங்கச் செய்தாள். ஆடிச்செவ்வாய் (ஜூலை 18, 25, ஆகஸ்ட் 1,8,15) வெள்ளி (ஜூலை 21, 28, ஆகஸ்ட்4,11) கிழமைகளில் அம்மனை வழிபடுவது சிறப்பு. அம்மனுக்கு படைத்த கூழைக் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும்.