நெல்லையப்பர் கோயிலில் வெள்ளிகொலுசு அணிந்து வலம் வந்த காந்திமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2017 02:07
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் நடராசப் பெருமானின் பச்சைசாத்தி வீதி உலா நேற்று நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் நாளை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி நேற்று பகலில் சுவாமிநடராசப்பெருமானின் பச்சை சாத்தி எழுந்தருளல் மற்றும் திருவீதி உலா நடந்தது. முன்னதாக கோயில் யானை காந்திமதி நடந்துசென்றது. கோயில் விழாக்கோலம் பூண்டிருப்பதால் யானைக்கும் நான்கு கால்களிலும் வெள்ளிக்கொலுசு அணிவிக்கப்பட்டிருந்தது. கொலுசு அணிவித்த சிறு குழந்தையைப்போல யானை காந்திமதியும் ரதவீதிகளில் வலம் வந்தது. இன்று நடக்கும் தேரோட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு, மக்களுக்கு அடிப்படைவசதிகள், குடிநீர் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.