சேஷ வாகனத்தில் சேதுநாராயணப் பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2017 04:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் சேஷவாகன எழுந்தருளல், வீதியுலா நடந்தது. இதையொட்டி காலையி்ல் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், உற்ஸவருக்கு திருமஞ்சன வழிபாடும் நடந்தது. பின்னர் மாலையில் சுவாமி சேஷவாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு மைய மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயில் திரும்பிய சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நராராயணன், நிர்வாகிகள் கண்ணன், பாபு ஏற்பாடு செய்தனர்.