Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து ... கம்பராயப் பெருமாள் கோயில் மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்றம்பள்ளி ராமகிருஷ்ணா மடத்தில் குரு பூர்ணிமா: ஏராளமானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2017
12:07

வேலூர்: நாட்றம்பள்ளி, ராமகிருஷ்ணா மடத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளியில், 108 ஆண்டுகள் பழமையான ராமகிருஷ்ணா மடம் உள்ளது. இங்கு குரு பூர்ணிமா விழா, நேற்று காலை, 5:00 மணிக்கு மங்கள ஆரத்தி, சுப்ரபாதத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, சிறப்பு பூஜை, வேத பாராயணம், பஜன் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, 108 ராமகிருஷ்ண போற்றி நடந்தது. இதில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், 300 பேர் பங்கேற்றனர். காலை, 10:30 மணிக்கு ராமகிருஷ்ணர் ஹோமம், ராமகிருஷ்ணர் குரு பூஜை நடந்தது. தொடர்ந்து ராமகிருஷ்ணர் குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

இதில் நாட்றம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி தியாக ராஜானந்தா பேசியதாவது: புதிய இடத்திற்கு போக நேர்ந்தால், விஷயம் தெரிந்த வழி காட்டி ஒருவர் சொற்படி நடக்க வேண்டும். அப்படியே கடவுளை அடைவதற்கான பாதையிலும், உண்மையான குரு ஒருவருடைய அறிவுரையை மட்டும் ஏற்று நடக்க வேண்டும். கங்கையை போன்றவர் குரு. குப்பைதஞி எல்லாம் மக்கள் கங்கையில் வீசுகின்றனர். ஆனாலும் கங்கையின் புனித தன்மை குறைவதில்லை. அதுபோல, நிந்தை, அவமானம், வெறுப்புக்கு மேலாக குரு இருக்கிறார். குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும். குரு என்பவர் பரம்பொருள். குரு சொல்வதை ஒரு குழந்தை போல அப்படியே நம்பி நடந்தால் தான், இறைவன் அருள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து விசேஷ ஆரத்தி, மலர் அஞ்சலி, அன்னதானம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar