திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்புகள், காலிமனைகள், நிலங்கள் உள்ளன. அந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில், கோயில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி நடவடிக்கை எடுத்துள்ளார். இடங்களை கண்காணிக்க பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் கோயில் இடங்களை கண்காணித்து அறிக்கை அளிப்பர்.