பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
12:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவர். அந்த பணம் மாதந்தோறும் பவுர்ணமி முடிந்ததும், எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பவுர்ணமி முடிந்த நிலையில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் தலைமையில் நடந்தது. கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், பக்தர்கள், 94 லட்சத்து, 44ஆயிரத்து, 576 ரூபாய் மற்றும், 221 கிராம் தங்கம், 5,890 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.