திருக்கோஷ்டியூர் ஆடிப்பூர உற்சவம்: ஜூலை 18 ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2017 01:07
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் ஆடிப்பூர உற்சவம் ஜூலை 18 ல் துவங்குகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர உற்சவம்11 நாட்கள் நடைபெறும். உற்சவத்தை முன்னிட்டு ஜூலை17 மாலை சேனைமுதல்வர் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஜூலை 18ல் காலை 7:10 மணிக்கு மேல் பெருமாள் கல்யாண மண்டபம் எழுந்தருளுவார். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கொடியற்றத்துடன் உற்சவம் துவங்கும். இரவில் ஆண்டாள்-பெருமாள் திருவீதி உலா நடைபெறும். தினசரி காலை சுவாமி திருவீதி புறப்பாடும், இரவில் ஆண்டாள் -பெருமாள் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். ஜூலை 24ல் காலை அலங்கார திருமஞ்சனம், மாலையில் ஆண்டாள், பெருமாள் தங்கப்பல்லக்கில் பவனி, மாலையில் சூர்ணாபிேஷகம் நடைபெறும். ஜூலை 27 ல் ஆண்டாள் தேரோட்டமும் நடைபெறும். மறுநாள் காலையில் தீர்த்தவாரியும் மாலையில் தங்கப்பல்லக்கில் பவனியுடன் உற்சவம் நிறைவடையும்.