பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
01:07
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, 108 சிலைகள் வைத்து, விசர்ஜனம் செய்வது என, இந்துநல முன்னணி முடிவெடுத்துள்ளது. கோத்தகிரியில் இந்துநல முன்னணி சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அடுத்த மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவதுடன், கோத்தகிரி பகுதியில், 108 விநாயகர் சிலைகள் உட்பட, மாவட்டம் முழுவதும், 501 சிலைகள் வைத்து, பூஜிக்கப்பட்ட சிலைகளை விசர்ஜனம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் தேவா முன்னிலை வகித்தார். மாநில பொதுசெயலாளர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், யாதவ், சுந்தர் மற்றும் வருண்பாபு உட்பட, பலர் பங்கேற்றனர். ஒன்றிய துணைத் தலைவர் சிவசந்திரன் நன்றி கூறினார்.