Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பொன் நகை சேரும் புன்னகை மலரும் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பொன் ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) (தெய்வ அருளால் தொட்டது துலங்கும்) விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) (விடாமுயற்சியே வெற்றிக்கு வழி)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2017
17:07

பிறர் துயர் போக்க உதவும் துலாம் ராசி அன்பர்களே!

ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு 10-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் பொருள் இழப்பு, உடல் உபாதை ஏற்பட வாய்ப்புண்டு. விடாமுயற்சி இருந்தால்
மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். கேது 5-ம் இடமான கும்பத்தில் இருந்து 4ம் இடமான மகரத்திற்கு வருகிறார். அதனால் நட்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உடல் நலம் பாதிப்பு வரலாம். சனிபகவான் ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது அல்ல. ஏழரைச் சனியின் இறுதிக்கட்டமான இதில், சனியின் பார்வை பலத்தால் நன்மை காண்பீர்கள். டிச.18-ல் சனி 3-ம் இடமான தனுசுக்கு மாறிய பின்,  தொழில் வளர்ச்சியால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ராசிக்கு 12-ல்  இருக்கும் குருவால் மனக்கவலை, வீண் அலைச்சல் ஏற்பட்டாலும்,  ஆக. 31-க்குப் பிறகு நிலைமை மாறும்.  இருந்தாலும் ஜென்ம குருவாக அவர் ராசிக்கு வருவதால் அதிக நன்மையை எதிர்பார்க்க முடியாது.  

2018 பிப்.13ல்  குரு 2ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுவது சிறப்பான அமைப்பாகும். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
இனி விரிவான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். சிக்கனம் பின்பற்றுவது அவசியம். கணவன்- மனைவி இடையே அன்பு மேலோங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை குறுக்கிடலாம். சில காலம் பொறுத்திருப்பது நல்லது.  தொழில் வியாபாரத்தில் பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.  எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம்.

சற்று கவனம் தேவை. பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம்.  மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு கரும்பு, எள், பயறுவகை மற்றும் பனை பொருட்களில் நல்ல மகசூல் கிடைக்கும். விடாமுயற்சி இருந்தால் புதிய சொத்து வாங்க முடியும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.  கேதுவால்  உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். 2018 ஜனவரி– 2019 பிப்ரவரி சனிபகவானால் புதிய முயற்சி வெற்றி  பெறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சியில் இருந்த தடையனைத்தும் விலகும். பொருளாதார வளம் சிறக்கும்.

குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நிறைவேறும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். 2018 பிப். 13- க்கு பிறகு திருமணம் பெண்களால் பொன்,  பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். எனவே நட்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. 2018 பிப். 13- க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள்பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். 2018 பிப்.13 க்கு பிறகு குருவின் பலத்தால் மேன்மை உண்டாகும்.  சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். விரும்பிய இட, பணிமாற்றம் பெறலாம். கலைஞர்கள் விடாமுயற்சியால்புதிய ஒப்பந்தம் பெறுவர். 2018 பிப்.13-க்கு பிறகு அவப்பெயர், போட்டி முதலியன மறையும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க  வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே முன்னேற்றம் உண்டாகும்.  2018 பிப்.13-க்கு பிறகு போட்டியில் வெற்றி காணலாம். விவசாயிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை ஓரளவு பெறலாம். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர். 2018 பிப்.13க்கு பிறகு  சுபநிகழ்ச்சி கைகூடும்.

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு, சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு தீபம்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »
temple
ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில்  பிரச்னை, தொலைதூர பயணம் ... மேலும்
 
temple
ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்
 
temple
ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் ... மேலும்
 
temple
ராகு  ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.