அன்னுார் : ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று சிறப்புவழிபாடு நடக்கிறது. ஆடி மாத கிருத்திகையன்று முருகப்பெருமான் கோவில்களில் சிறப்புவழிபாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா மற்றும் அருணகிரிநாதர் விழா பிரசித்தி பெற்ற குமரன்குன்று கல்யாணசுப்பிரமணியசாமி கோவிலில் இன்று நடக்கிறது. காலை 9:00 மணிக்குகலச பூஜை, அலங்கார பூஜை, அபிேஷக பூஜை, பஜனை, சுவாமி திருவீதியுலா நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், முருகப்பெருமான்சன்னிதியில், காலை 9:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. மதியம்அன்னதானம் வழங்கப்படுகிறது. குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர்கோவிலில் மதியம் சிறப்பு வழிபாடு நடக்கிறது.