பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
12:07
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே பன்னீர்மடையில் உள்ள தர்மராஜர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. தர்மத்தின் அடிப்படையில் பல துன்பங்களை அனுபவித்து, பஞ்சபாண்டவர்களில் கடைசியாக முக்தி அடைந்தவர் தர்மர். நுாறு ஆண்டுகளுக்கு முன் பன்னீர்மடையில் தர்மராஜருக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் தர்மராஜர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, மராமத்து பணிகள், புதிய கொடிமரம் அமைக்கப்பட்டு, வர்ணங்கள் பூசி கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ேஹாமம், தீர்த்தக் குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாலிகை அழைத்தல், யாக பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவில், சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், பேரூராதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தர்மராஜருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.