பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
12:07
திருப்பூர் : சுக்ரீஸ்வரர் கோவிலில், வரும், 21ல் நடக்கவுள்ள திருவிளக்கு பூஜையில் பங்கேற்க, பெண் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்தில், பழமையான ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைநாயகி அம்மன் கோவில் உள்ளது; நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில், தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, வரும், 21ம் தேதி காலை ஸ்ரீ கணபதி வழிபாடு, புண் யாகம், சிவசக்தி கலசஸ்தாபனம், ருத்ரஜெயம், விசேஷ ஹோமம், திரவ்ய பகுதி, பூர்ணாகுதி நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு, மகா தீபாராதனையும்; மாலை, 5:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர், 9442373455 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.