சபரிமலை விழா: திருவல்லாவில் ஆறு ரயில்கள் நிற்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2011 11:11
சென்னை:சபரிமலை கோவில் விழாவையொட்டி, கேரள மாநிலம் திருவல்லாவில் ஆறு ரயில்கள் நின்று செல்லும்.திப்ரூகார் - கன்னியாகுமரி, கொச்சுவேலி-கன்னியாகுமரி, ஹூப்ளி-கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள், யஷ்வந்த்பூர் - கொச்சுவேலி (வாரத்தில் மூன்று நாட்கள்) கோழிக்கோடு - திருவனந்தபுரம் ஜன சதாப்தி (வாரத்தில் ஐந்து நாட்கள்) எக்ஸ்பிரஸ் ரயில்கள், கேரள மாநிலம் திருவல்லாவிலும், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் செங்கனூர் மற்றும் திருவல்லாவிலும், வரும் ஜனவரி 19ம் தேதி வரை இருவழி மார்க்கத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.